More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மனித உடல் உறுப்புகளுக்கு விலை கேட்கும் கேம் ஷோ அமெரிக்க டாக்டர்களால் அதிர்ச்சி!
மனித உடல் உறுப்புகளுக்கு விலை கேட்கும் கேம் ஷோ அமெரிக்க டாக்டர்களால் அதிர்ச்சி!
Mar 17
மனித உடல் உறுப்புகளுக்கு விலை கேட்கும் கேம் ஷோ அமெரிக்க டாக்டர்களால் அதிர்ச்சி!

 மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்படுகிறது. ஒருவரின் உயிரை காப்பாற்றுவதால், கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து டாக்டர்களை மக்கள் மதிக்கின்றனர். ஆனால், அந்த டாக்டர்களே, ஆபரேஷன் தியேட்டரில் ஆபரேஷன் செய்பவரின் உடல் பாகங்களை காட்டி சரியான விலை கேட்கும் ‘கேம் ஷோ’ நடத்தினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? அப்படிப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஸ்பெக்ட்ரம் ஹெல்த் மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷனுக்கு நடுவே மனித உடல் உறுப்புகளை காட்டி நடத்திய இந்த கேம் ஷோவை வுட்-டிவி சேனல் அம்பலமாக்கி உள்ளது.



சமீபத்தில், அந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். அவை, ஆபரேஷன் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் எடுக்கப்பட்டவை. அதில், ஆபரேஷன் செய்யப்படும் நபர் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் மயக்கத்தில் கிடக்க, டாக்டர் ஒருவர் தனது கையில் பெரிய அளவிலான உடல் உறுப்பு ஒன்றை ரத்தக்களரியாக வைத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் கேன்சர் நோயாளியிடம் இருந்து அகற்றப்பட்ட ஒரு பாகத்தை கையில் வைத்துள்ளார்.



இந்த புகைப்படங்களுடன், ‘இந்த உடல் பாகங்களின் எடை என்ன?’,  ‘இவற்றின் சரியான விலையை கணித்திடுங்கள்’, என்பது போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அதோடு, ‘அதிகமாக சொன்னால் கேமில் இருந்து நீங்கள் வெளியேறி விடுவீர்கள்’ என்பது போன்ற எச்சரிக்கைகளும் விடப்படுகின்றன. இதற்கு பலர் பதில் அளித்துள்ளனர். இந்த விவகாரம் டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்ட பிறகு பெரும் சர்ச்சையாகி உள்ளது. சம்மந்தப்பட்ட டாக்டர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்பெக்டரம் ஹெல்த் மருத்துவமனை தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்

Mar30

மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகர

May04

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்க

Jan30

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ

Sep21

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின்

Jun17

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா

Mar29

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை

Jun23

கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார

Oct28

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்

Sep23

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

May17

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ

Mar07

மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும

Mar07

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய

Feb04

சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப

Sep08

அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப