More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது - மோடி பெருமிதம்
இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது - மோடி பெருமிதம்
Mar 24
இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது - மோடி பெருமிதம்

டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-



கொரோனா காலகட்டத்தில் நாடு அந்த வைரஸ் சவாலை மட்டுமே எதிர்கொள்ளவில்லை. மற்ற சவால்களையும் எதிர்கொண்டது.



எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம், புயல்கள், நில நடுக்கங்கள், பிறகு வெட்டுக்கிளிகளின் திரள் தாக்குதல் என பல சவால்கள் அணிவகுத்தன. நான் இந்த சவால்களை மகிழ்ச்சியுடனே எதிர்கொண்டேன். அவற்றை நாடு கடந்தும் வந்துள்ளது.



இந்த சவால்களுக்கு அப்பாலும், நாடு வலுவாக வெளிப்பட்டுள்ளது. இந்தியாவின் முழுத்திறனையும் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டது.



நான் 2 தசாப்தங்களுக்கு மேலாக (20 வருடங்களுக்கு மேலாக) பொதுவாழ்வில், அரசுப்பணியில் உள்ளேன். முதலில் ஒரு மாநிலத்தின் (குஜராத்) முதல்-மந்திரியாக இருந்தேன். இப்போது பிரதமராக உள்ளேன். ஒரு நாள்கூட நான் விடுமுறை எடுத்துக்கொண்டதில்லை.



நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபைகளுக்கு தவறாமல் வரவேண்டியது அவசியம் ஆகும்.



இவ்வாறு அவர் கூறினார்.



இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் பற்றிய ஒரு விளக்கத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். “கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கத்துக்கு மத்தியிலும், பொதுமக்கள் மீது கூடுதலாக எந்த வரியையும் விதிக்கவில்லை. அனைத்து தரப்பினருக்குமான முழுமையான பட்ஜெட்டாக அது அமைந்தது” என குறிப்பிட்டார்.



வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் இந்தக் கூட்டத்தில் பேசினார். அவர், “கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்தியாவின் அந்தஸ்து, நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளாலும், பின்னர் தடுப்பூசிகளாலும் உலகளவில் உயர்ந்தது” என குறிப்பிட்டார்.



வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்தது தொடர்பான வந்தே பாரத் திட்டம் பற்றியும் ஜெய்சங்கர் பகிர்ந்து கொண்டார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun21

உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப

Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Oct17

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக

Feb26

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி

Apr10

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

May12

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம

Nov08

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்

Jun09

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த

Jul08

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார

Sep16