More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு அதிகாரமும் கிடையாது- அநுரகுமார திஸாநாயக்க
ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு அதிகாரமும்  கிடையாது- அநுரகுமார திஸாநாயக்க
Mar 23
ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு அதிகாரமும் கிடையாது- அநுரகுமார திஸாநாயக்க

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு அதிகாரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடையாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை தோறும் கிராமங்களுக்கு சென்று மக்கள் குறை கேட்கிறார் என்ற போர்வையில் ஊடக பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார். அரசுக்கு எதிராக அந்தவாரம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வளமாக அதனை பயன்படுத்தி வருகின்றார். ஆக மக்கள் பிரச்சினைகளுக்கு செவிமடுக்காது, தான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றார்.



குறிப்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போது, சில ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் இலக்கு வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.



‘எனக்குப் பாடம் கற்பிக்கத் தெரியும். படிப்பிக்க வேண்டிய விதமும் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நாட்டை ஆண்டாலும் எந்தவொரு ஊடகங்களுக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்மூலம் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய அதிகாரம் தனக்கு இருந்தும் அதனைப் பயன்படுத்தவில்லை என்பதையே ஜனாதிபதி கூறவிளைகின்றார்.



அத்துடன், ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளாராம். ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதி பத்திரமோ அல்லது வரப்பிரதாசமோ கிடையாது. அது ஊடகங்களுக்கான உரிமையாகும்.



அதேபோல் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எப்படி பாடம் கற்பிக்கப்பட்டது என்பது எமக்குத் தெரியும். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். எக்னெலிகொட காணாமல்ஆக்கப்பட்டார். இப்படி பல அச்சுறுத்தலான பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.



எனவே, ஜனாதிபதி கற்பிக்கவுள்ள பாடம் என்பது நவீன ஊடகம் தொடர்பானதாக இருக்காது. அது அச்சுறுத்தலாகவும், அழுத்தமாகவுமே அமையும். ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்ககூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்காது. தனது நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் ஊடகங்களை அரவணைப்பதும், மக்கள் பக்கம் நின்று விமர்சிக்கும் ஊடகங்களை அச்சுறுத்துவதும் என இரட்டை நிலைப்பாட்டை ஜனாதிபதி கடைப்பிடிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க

Jun12

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்

May22

இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த

Mar29

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர

Sep29

மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை

Mar15

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி

Feb06

அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண

Apr09

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப

Feb03

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன

Oct19

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக

Apr27

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது

Feb02

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி

Sep29

ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்

Oct04

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ

Mar26

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா