More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அனைத்து ரேஷன் அட்டைக்கும் 6 சிலிண்டர் இலவசம்!
அனைத்து ரேஷன் அட்டைக்கும் 6 சிலிண்டர் இலவசம்!
Mar 21
அனைத்து ரேஷன் அட்டைக்கும் 6 சிலிண்டர் இலவசம்!

அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.



சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து தற்போது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,500 , அரிசிஅட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை, செய்யாறு தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது, மக்களை நம்பியே அதிமுக உள்ளது; மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 6 சிலிண்டர் விலை இல்லாமல் வழங்கப்படும் . அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தரப்படும் என்று கூறிய நிலையில் இன்று அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டரும், வாஷிங் மிஷினும் அளிக்கப்படும் என்றார்.



இதனிடையே சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து ரூ. 835 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சிலிண்டர் விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul02

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி

Jan25

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய

Jun26

உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த

Sep06

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம

Aug28