More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஏர்போர்ட்டில் ஸ்டாலினை மடக்கி கட்சியில் இணைந்த அதிமுக முக்கிய புள்ளி!
ஏர்போர்ட்டில் ஸ்டாலினை மடக்கி கட்சியில் இணைந்த அதிமுக முக்கிய புள்ளி!
Mar 21
ஏர்போர்ட்டில் ஸ்டாலினை மடக்கி கட்சியில் இணைந்த அதிமுக முக்கிய புள்ளி!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.



சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின் நிகழ்ச்சியை முடித்து கொண்டு சென்னை வருவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.



அப்போது அங்கு வந்த திருமங்கலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் தற்போது அமைப்பு செயலாளராகவும் உள்ள முத்துராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். முன்னாள் எம்எல்ஏ எம்.முத்துராலிங்கம் திமுகவின் மு.க.அழகிரி ஆதரவாளராக இருந்தவர். பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவிற்கு சென்றார். அங்கு ஓபிஎஸ்-க்கு மிகவும் நெருக்கமானவராக அவர் வலம் வந்தார்.



கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இவருக்கு பதிலாக திருமங்கலம் தொகுதியில் ஆர்பி.உதயகுமார் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்றார். அதேபோல் இவரிடம் இருந்த புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ராஜன் செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த இவருக்கு இந்தமுறையும் சீட் ஒதுக்கப்படவில்லை.



முன்னதாக திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரர் அறிவழகன் அமைச்சர் ஆர். பி உதயகுமார் முன்னிலையில் சமீபத்தில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul11

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ

Mar13
Jun07

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ

Oct08

இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட

Jun27

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு

Jan22

திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ

Aug31

கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததை

Aug21

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண

Feb08

15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத

Oct07

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக

Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Mar05

 கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர

Aug02

ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூற

Feb03

இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப

Aug04

மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ