More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கூட்டத்திலும் ஸ்டாலின் மனதை வென்ற ‘வெற்றிச் செல்வி’.. யார் தெரியுமா?
கூட்டத்திலும் ஸ்டாலின் மனதை வென்ற ‘வெற்றிச் செல்வி’.. யார் தெரியுமா?
Mar 20
கூட்டத்திலும் ஸ்டாலின் மனதை வென்ற ‘வெற்றிச் செல்வி’.. யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாட்கள் மிக குறைவாக இருப்பதால், சீக்கிரம் சீக்கிரமாக பிரச்சாரத்தை முடித்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அந்த வகையில், நேற்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.



வேட்பாளர்களை அறிவித்த பிறகு வழக்கம் போல, அதிமுக அரசை விமர்சித்து பேசத் தொடக்கி விட்டார். ஸ்டாலின் பரப்புரையில் கூட்டத்துக்கா பஞ்சம்… மக்களின் கூட்டம் ஒரத்தநாட்டில் ஆர்ப்பரித்தது. அந்த கூட்டத்திலும் ஒரு குரல் என் குழந்தைக்கு பெயர் வையுங்க ஐயா என்று கோரியது. இது ஸ்டாலின் காதில் விழுந்து விட்டது. உடனே மைக்கை எடுத்து குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் குழந்தை என்று சொல்ல, ‘வெற்றிச் செல்வி’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்.



கூட்ட நெரிசலால் அழுதுக் கொண்டே இருந்த குழந்தை, ஸ்டாலின் பெயர் வைத்தவுடன் சிரிக்கத் தொடங்கியது அனைவரையும் பூரிக்க வைத்துள்ளது. பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு மு.க.ஸ்டாலினை கலங்க வைத்தது என்றே சொல்ல வேண்டும். அவரது மனைவி பெயர் வெற்றிச் செல்வி. அந்த பெயரை தான் ஸ்டாலின் அந்த குழந்தைக்கு சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul07

தமிழக முதல்வர் 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில்

Feb27

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந

Jan27

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Mar20

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய

Jun21