உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை சீரானது. பல்வேறு நாடுகளில் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கி இருந்தது
ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் அப்-பை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 கோடிக்கும் அதிகமான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் பிரபலமான செயலி என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் முடங்கியது குறித்து அந்நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.