More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காணிகளுக்குள் உட்செல்ல இராணுவத்தினர் தடை மக்கள் விசனம்!
காணிகளுக்குள் உட்செல்ல இராணுவத்தினர் தடை மக்கள் விசனம்!
Mar 12
காணிகளுக்குள் உட்செல்ல இராணுவத்தினர் தடை மக்கள் விசனம்!

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் உட்செல்ல இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தடைவிதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.



குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் குடியேற்றங்கள் எதுவும் இல்லை. அப்பகுதியில் போருக்கு முன்னர் சிறுவர் பாடசாலை ஒன்று இருக்கின்றது. அப் பாடசாலையில் வயலுக்கு செல்பர்கள் மட்டுமே தங்கியிருந்து வயலுக்கு செல்வார்கள். ஆனால் அப்பகுதிகுள் உட்செல்வதற்கோ காணிகளை துப்பரவு செய்யவோ இராணுவமும், வனவள திணைக்களத்தினரும் தடை செய்து வருகின்றார்கள்.



குறித்த பகுதியில் வசித்த மக்கள் தம் காணிகளுக்கான உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்ற போதும், வெடிவைத்தகல் கிராமத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதனால் குறித்த பகுதியில் மக்கள் உட்சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்தும் தடைவிதித்து வருகின்றனர்.



இக் கிராமத்தில் ஆரம்பத்தில் 65 குடும்பம் வசித்து வந்த நிலையில் தற்போது 15 குடும்பத்தினர் இக்கிராமத்தில் உள்ள தமது சொந்த காணிக்குள் குடியேறுவதற்கு கிராம சேவையாளர், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தினை இராணுவம், வனவள திணைக்களத்தினருக்கு வழங்கியிருந்தும், கிராமத்தில் உள் நுழைவதற்கான அனுமதி பத்திரத்துடன் குறித்த பகுதியில் உள்ள தம் சொந்த காணிகளினை துப்பரவு செய்ய சென்ற போது இராணுவத்தினர் குறித்த கிராமத்திற்குள் உட்செல்ல தடைவிதித்துள்ளனர்.



2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் உட்செல்ல இராணுவத்தினர் தடை விதித்த நிலையில் இது தொடர்பாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலீபனிடம் இது தொடர்பாக முறையீடு செய்த போது இவ்விடயம் தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுதருவதாக எமக்கு கூறியிருந்தும் இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.



ஆனாலும் குறித்த பகுதிக்குள் அம்மன் ஆலயம் இருப்பதனால் வருடா வருடம் வரும் பங்குனி திங்கள் உற்சவத்தினை நடாத்துவதற்கு மட்டும் ஆலய வளாகத்தினை சுத்தப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் குறித்த பகுதி மக்கள் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ

Apr08

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர

May17

பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி

May02

இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை

Jan19

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங

Oct15

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்

Oct05

Jul13

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக

May18

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ

Mar26

பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள

Jun24

நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Feb02

இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின

Mar01

மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்

Oct03

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந

Oct21

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்