More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரூ.1 லட்சம் கொரோனா நிதி - மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்
ரூ.1 லட்சம் கொரோனா நிதி - மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்
Mar 12
ரூ.1 லட்சம் கொரோனா நிதி - மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.



இதற்கிடையே அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.



அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் கொண்டு வந்தார்.



இந்த கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது.



இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி மசோதாவில் அதிபர் ஜோ பைடன் இன்று கையெழுத்திட்டார் என  வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.



இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறும். இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம்) வழங்கும் பணி தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul16

பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வ

Mar22

உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற

Apr05

ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம

Jun16

சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு

Jun02
May07

உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ

Mar05

ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின

Mar26

உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப

Jul25