கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இன்று விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை யயயயசார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிபபுணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதனையொட்டி, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பலகையில், நேர்மையுடன் வாக்களிப்போம் என்று காவல் அதிகாரிகள் கையெழுத்து போட்டனர். தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக கொண்டர்.
காவலர்கள் தவிர்த்து, ஏராளமான பொதுமக்களும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தங்களுடைய கையெழுத்தை பதிவிட்டனர்.