More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மகளிர் தின பேரணியில் வெடித்தது வன்முறை - 80 பெண்கள் படுகாயம்!
மகளிர் தின பேரணியில் வெடித்தது வன்முறை - 80 பெண்கள் படுகாயம்!
Mar 10
மகளிர் தின பேரணியில் வெடித்தது வன்முறை - 80 பெண்கள் படுகாயம்!

உலகம் முழுவதும் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.



இதையொட்டி மெக்சிகோவில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மெக்சிகோ சிட்டியின் மையப்பகுதியில் திரண்ட பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.



இதற்கிடையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்திடாத வண்ணம் அதிபர் மாளிகையின் முன்பு போலீசார் இரும்பு சுவரை அமைத்தனர். மேலும் அதிபர் மாளிகையை சுற்றிலும் பெண் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிபர் மாளிகையை நெருங்கிய போராட்டக்காரர்கள் சுத்தியல், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் இரும்பு சுவரை தகர்த்து கீழே தள்ள முயற்சித்தனர்.‌



பெண் போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.‌ போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர்.



அதேபோல் போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை போலீசார் மீது வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.‌



இந்த மோதலில் பெண் போலீஸ் அதிகாரிகள் 62 பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் 19 பெண்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Aug18

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்

Sep27

அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு கா

Jun17

இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது

Sep13

கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை

Oct25

நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ள

Jan26

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்

Jun23

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர

Mar16

ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Feb10

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி

Jan19

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&

Sep25

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப

May31

உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்

Mar26

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ