More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அதிகரிக்கும் கொரோனா தொற்று - மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி!
அதிகரிக்கும் கொரோனா தொற்று - மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி!
Mar 16
அதிகரிக்கும் கொரோனா தொற்று - மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,725 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இதகிடையே, கொரோனா அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று முதல் 21-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.



இந்நிலையில், மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக மார்ச் 17-ம் தேதி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். 



இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மாநிலத்தில் எந்த அளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தடுப்பூசி செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul02

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட

Mar15

போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா

Oct21

தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ர

Feb25

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்

May28

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்

Sep06

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி

Jul25

சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப

Aug26

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர

Aug18

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்

Sep23

கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா

Jun06

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும

Mar11

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச

Jan17

தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட

May23

குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா

Jun08

இலங்கையர் மரணம்

ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க