More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுரேன் ராகவன் இடையிலான சந்திப்பு!
 புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுரேன் ராகவன் இடையிலான சந்திப்பு!
Mar 15
புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுரேன் ராகவன் இடையிலான சந்திப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதுக்குடியிருப்பு பெண் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று (மார்ச் 14) இடம்பெற்றது.



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அரசியல் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.



யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்கு உட்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுவதோடு அதிகளவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள மாவட்டமாகவும் காணப்படுகின்றமையால் இம்மாவட்டத்தின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழனென்ற ரீதியில் தமக்கு இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.



முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளால் இதன்போது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.



சுயதொழிலில் ஈடுபட்டு தமது பொருளாதாரத்தை முன்னெடுத்துவரும் பெண்களை பலப்படுத்துவதன் ஊடாகவே உண்மையான தேசிய பொருளாதாரத்தை இலங்கையில் கட்டியெழுப்ப முடியுமென்றும் வன்னி மாவட்டத்தில் அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்

Feb06

இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்

Mar12

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந

Sep04

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி

Apr02

நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத

Feb03

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர

Apr02

இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித

May21

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்

Feb07

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை

Aug07

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்

Aug30

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி

May02

சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ

Sep22

இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குற

Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க

Aug07

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக