முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒன்றியமாக உதயமாகியது. மாவட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படியும் மாவட்ட பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒன்றியமாக உதயமாகியது.
தலைவராக ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியும் கிராம மட்ட அபிவிருத்தி சங்கங்களின் சமாச தலைவருமான திரு. சின்னத்தம்பி ராஜேஸ்வரன் அவர்களும், உபதலைவராக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய திரு. நவநீதன் (முல்லை நீதன்) அவர்களும், செயலாளராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாச உபதலைவர் திரு. தவராசா சசிரோகன் அவர்களும், உபசெயலாளராக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க மாவட்ட இணைப்பாளரும் பிரதேச செயலக உத்தியோகத்தருமான திரு. நடேசன் மாசுதன் அவர்களும், பொருளாளராக அகில இலங்கை சமாதான நீதவானும் பிரதேச செயலக உத்தியோகத்தருமான திரு. நடனலிங்கம் சுஜீபன் அவர்களும் தெரிவு செய்யப்படடதோடு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்ட்னர்.
இந்நிர்வாகத்திற்கு பக்கபலமாக மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.எம்.யெ. ரெஜினோல்ட் அவர்களின் தலைமையில் மாவட்டத்தின் பல்துறைகளையும் சார்ந்த ஒய்வு பெற்ற மற்றும் சேவையில் உள்ள முக்கியஸ்தர்களை கொண்ட ஆலோசனை சபை ஒன்றும் அமைக்கப்பட்டது.
இம்மாவட்ட அபிவிருத்தி ஒன்றியமானது மாவட்ட அபிவிருத்தியில் முனைப்போடு செயல்படுமெனவும் , இதற்கு அனைவரின் ஒத்துழைப்புக்களையும் குறிப்பாக புலம்பெயர் உறவுகளின் உதவிகளையும் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.