More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ராணுவம் அட்டூழியம் - துப்பாக்கிச்சூட்டில் மேலும் 4 போராட்டக்காரர்கள் உயிரிழப்பு!
ராணுவம் அட்டூழியம் - துப்பாக்கிச்சூட்டில் மேலும் 4 போராட்டக்காரர்கள் உயிரிழப்பு!
Mar 14
ராணுவம் அட்டூழியம் - துப்பாக்கிச்சூட்டில் மேலும் 4 போராட்டக்காரர்கள் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.



கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம். ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் எனக்கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.



மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் சர்வதேச நாடுகளை மியான்மர் ராணுவத்துக்கு எதிராக தூண்டுவதால் இது ராணுவ ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. எனவே மக்களின் போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.‌ 



போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை கொன்று குவித்து வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர்.ஆனாலும் ராணுவத்தின் இந்த அடக்குமுறையை மீறியும் மியான்மரில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.



இந்தலையில்,  ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான மாண்டலேவில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் 

உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து

Feb18

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து

Jul31

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்

Mar17

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி எ

Mar09

இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி

May05

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர

Mar30

வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்

Jul31

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Feb27

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Jan18

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப

Aug03

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரி

Aug19

ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி

Oct10

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா

Jan02

கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா  2023ம