More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தமிழ் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தமிழ் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!
Mar 13
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தமிழ் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிகளையும் யாழில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.



இந் நிலையில் இன்றையதினம் பல்வேறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் நாடளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி ரீதியாக தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் நாடளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்..



இதில் கூட்டமைப்பு சார்பில் தமிழரசு தலைவர் மாவை சேனாதிராஜா, நாடளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.



அதே போன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்கினேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.



மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம

Aug19

கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு

Mar03

இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம

May02

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ

Jun08

ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத

May08

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச

Oct25

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச

Mar23