வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்கவிற்கு குருநாகல் காவல்துறை நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களாக வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி எதிர்வரும் திங்கட்கிழமை (15) குருநாகல் தலமை காவல்துறை நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறை மா அதிபரினால் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியாவிற்கான புதிய போக்குவரத்து காவல்துறை பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரையில் வவுனியா போக்குவரத்து பதில் காவல்துறை பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொள்வார் என்று மேலும் தெரியவருகின்றது.