More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!
Mar 06
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது



ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர்.



அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.



அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியானது.



அதில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.



ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep13

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய

Mar15

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச

Mar20

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய

Feb14

பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்

May14

1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க

May31

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள

Jan20

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற

Jul27

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்

Mar27

கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் 

இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்

Mar20

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி

Jul25

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ

Aug11

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா

Aug29

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க

Mar25

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள