More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்!
ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்!
Mar 05
ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்!

கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பலரையும் அழைத்து கருத்து கேட்டு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தும் சந்தித்தார். அன்றிலிருந்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தவர் அர்ஜூன் சம்பத்.



அதே மாதிரி ரஜினி ஆன்மீக அரசியல் என்று அறிவித்ததும், அதுபற்றிய விமர்சனங்களுக்கும், குழப்பங்களுக்கும் ரஜினியின் பி.ஆர்.ஓ. மாதிரி இருந்து தொடர்ந்து விளக்கம் கொடுத்துக்கொண்டே வந்தார் அர்ஜூன் சம்பத்.



ரஜினி கட்சி தொடங்கியதும் அனைத்துக்கட்சி கூடாரங்களும் காலியாகிவிடும் என்று சொல்லி வந்தவர், கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் ரஜினி தீவிரம் காட்டியதும், 234 தொகுதிகளிலும் ரஜினிக்கு ஆதரவு என்று தெரிவித்தார் அர்ஜூன் சம்பத். கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்ததும், ரஜினியின் முடிவை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தார் அர்ஜூன் சம்பத்.



இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி சொன்ன ஆன்மீக ஆரசியலையே முன்னெடுத்து செல்கிறார். இந்துக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றுதான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் 180 தொகுதிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்றும், வரும் 10-ம் தேதிக்குள் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, நேர்காணலும் நடத்தப்பட்டு, 11ம் தேதி அன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறவும் கேட்டு வருகிறோம் . அந்த முயற்சியும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் அர்ஜூன் சம்பத்.



தான் கட்சி தொடங்கவில்லை என்றதும், தனது ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ரஜினி சொல்லி இருப்பதால், அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அர்ஜூன் சம்பத் நினைப்பதாகவும், அவர்களின் ஆதரவும் இருக்கிறது. அதானால்தான் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார் என்றும் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul13

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்

Mar31

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை

Mar25

தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க

May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத

Sep04

தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப

Apr02

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா

May26

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்&

Jun09
Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Jan21

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்

Feb16

அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Mar20

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க

Sep20
Jun26

கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ