More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை!
கொரோனா ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை!
Mar 05
கொரோனா ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை!

கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச சபை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பிரதேச செயலகத்திடம் இருந்து பெறப்பட்ட காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன.



இது தொடர்பான ஒழுங்குகளை மேற் கொள்வதற்காக காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பக்களின் பிரதி நிதிகள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது



இது தொடர்பாக கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.



ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள், கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பக்களின் பிரதி நிதிகள் ஒட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் ,இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



இதன் போது கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டு அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது.



தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 10 கொவிட் ஜனாசாக்கள் குளிரூட்டிகளிலும் ,பிரேத அறைகளிலும் உள்ளதாகவும் இந்த ஜனாசாக்களை இன்னும் ஒரு சில தினங்களில் குறித்த காணியில் நல்லடக்கம் செய்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர

Apr04

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது

Jan22

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத

Apr04

நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ

Jun16

இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து

Apr28

முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும

Mar27

மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற

Jun12

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்

Sep20

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப

Mar06

இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெ

Mar20

நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த

Mar27

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய

May02

தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத

May24

நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது

இந்

Dec17

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற