More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்
மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்
Mar 08
மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



குறித்த நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இலங்கை பதிவு செய்திருந்த வகையில் தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.



இந்த விடயம் குறித்து எமது செய்தி சேவை வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.



தற்போது இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.



மீதமுள்ள தடுப்பூசிகள் தற்போது சுகாதார தரப்பின் வசம் உள்ளதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



இந்தநிலையில் இரண்டாவது முறையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.



சில சந்தர்ப்பங்களில் குறித்த நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுமாயின் அதே தயாரிப்பை வேறு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



எவ்வாறாயினும் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதில் பிரச்சினை ஏற்படாதென தாம் எதிர்பார்ப்பதாகவும் இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கும் காலம் வரும் போது தடையின்றி தடுப்பூசிகள் கிடைக்குமென நம்புவதாகவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul15

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட

May12

காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற

Feb25

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

Feb05

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி

Jan11

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க

Feb04

இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம

May31

இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ

Apr09

இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட

Oct04

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ

Aug14

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம

Oct03

இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க

Oct02

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக

Apr01

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ

Jun08

நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு