More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கூட்டணிக்கு வெற்றி மகுடமா?.. என்ன சொல்கிறார் பிரபல ஜோதிடர்!
கூட்டணிக்கு வெற்றி மகுடமா?.. என்ன சொல்கிறார் பிரபல ஜோதிடர்!
Mar 08
கூட்டணிக்கு வெற்றி மகுடமா?.. என்ன சொல்கிறார் பிரபல ஜோதிடர்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, திமுக ஆகிய மாபெரும் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அரசியல் கட்சிகள் அவ்வப்போது கூட்டங்களை கூட்டி மக்களை சந்திப்பதையும் தவிர்க்கவில்லை.



மீண்டும் வெற்றி வாகையை சூட திட்டமிட்டிருக்கும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல, திமுகவும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததோடு ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்து பல திட்டங்களை தீட்டியிருக்கிறது. ஒவ்வொன்றாக தேர்தல் நேரத்தில் வெளிபடுமென வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.



இதனிடையே, தேர்ந்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தொடங்கிவிட்டன. ஒரு சில கருத்து கணிப்புகளின் படி, திமுக வெற்றி மகுடத்தை சூடும் என சொல்லப்படுகிறது. அதாவது, தமிழக மக்கள் எதிர்க்கும் பாஜகவுடன் அதிமுக கைகோர்த்திருப்பதால் அவர்கள் தோல்வியை தழுவார்கள் என கூறப்படுகிறது.



இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை சரியாக கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவையும் கணித்திருக்கிறார். 2021ம் ஆண்டு தேர்தல் அதிமுகவுக்கே சாதகமாக இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி வெற்றி மகுடத்தை சூடும் என்றும் திமுக 100க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த

Jun12

தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட

Sep20

சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்

Mar13

சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை

Aug24

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப

Aug19

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி

Aug23

தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்

May14

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,

Feb01

திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம

Jun18