More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார்!
பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார்!
Mar 07
பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார்!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீடு ,பிரச்சாரம் என அனல்பறக்கும் அரசியல் களத்தில் பணியாற்றி வருகின்றன. இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக எப்படியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக போராடி வருகிறது.



இதற்காகவே பாஜகவின் முக்கிய தலைவர்களான மோடி ,அமித்ஷா ,ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் தமிழகத்திற்கு வாரம் ஒருமுறை வந்த வண்ணம் உள்ளனர்.



வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளை ஓரம் கட்ட நினைத்து காலடி எடுத்து வைத்துள்ளது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சி அதிமுக. இரட்டை தலைமையில் அதிருப்தி, சசிகலா வருகை, தினகரனின் நெருக்கடி என பல குழப்பங்களை தன்வசமாக்கிய பாஜக, அதை புத்திசாலிதனமாக பயன்படுத்திக்கொண்டு அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்குள் நுழைந்துள்ளது.



எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தில் தனித்து நின்றோ அல்லது பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தோ தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு உள்ளது.அதனால் இந்த தேர்தல் பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக இன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார்.



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வருகிறார் அமித் ஷா. சுசீந்திரம் கோயிலுக்கு செல்லும் அமித் ஷா வெற்றி கொடி ஏந்தி செல்வோம் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.



இதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல், குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் பிற்பகலில் ஆலோசிக்கவுள்ளார்.குமரி தொகுதியை திமுக கூட்டணி காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது கூடுதல் தகவல்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug15

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ

Apr04

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி

Mar14

சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல

Aug13

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்

Oct05

நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட

Apr22

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற

Aug18

சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை

Jul26

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப

May05

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ

Feb26

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில

Mar30

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி

Feb04

‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்

Jan19

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம

Sep17

ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச

May26

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்