More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • புதிய அவதாரம் எடுக்கும் செல்வராகவன்… குவியும் வாழ்த்து!!!
புதிய அவதாரம் எடுக்கும் செல்வராகவன்… குவியும் வாழ்த்து!!!
Feb 26
புதிய அவதாரம் எடுக்கும் செல்வராகவன்… குவியும் வாழ்த்து!!!

இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன் என செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.



கஸ்தூரி ராஜாவிடம் துள்ளுவதோ இளமை படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் செல்வராகவன். அதன்பிறகு தனுஷ் நடித்து சூப்பர் ஹிட்டடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். செல்வராகவன் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு. அப்படி தன் படங்களில் ஒவ்வொரு காட்சிகளை செதுக்குவார்.



இயக்குனராக ஒரு பெரிய அடையாளத்தையே ரசிகர்களிடம் உருவாகியுள்ள செல்வராகவன், தற்போது நடிப்பிலும் தன்னை ஒரு திறமையான நடிகன் என நிரூபித்துக்காட்ட களமிறங்கியிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காகிதம்’. இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தன் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.



இந்த படத்தில் நடிப்பு குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்

23 ஆண்டுகளாக இயக்குனராக இருந்துள்ளேன். இன்று முதல் நடிகராக உள்ளேன். என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டு இருக்கிறேன், அவர்கள் தான் என்னை உருவாக்கியவர்கள் என்று கூறியுள்ளார். நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l

Dec13

விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண

Jun17

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில்

Sep03

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.

Jan19

பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப

May03

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த

Jun03

ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Nov02

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu

Feb11

கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப

Sep28

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம

Jul20

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு

Jul21

கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி

Jan22

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில

Feb10

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ