More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!
இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!
Mar 03
இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார்.



இந்த நிலையில் கடந்த ஆண்டு ஹாரி-மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.



இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன், இளவரசி மேகனை, மறைந்த அவரது மாமியாரும், இளவரசர் ஹாரியின் தாயாருமான இளவரசி டயானாவை பின்தொடர்ந்ததுபோல ஊடகத்தினர் பின் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.



மேகன்  தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை இங்கிலாந்து நாளிதழ் ‘மெயில்’ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாளிதழ் மீது அவர்கள் வழக்கு தொடுப்பதாக இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அறிவித்தனர். தனது மனைவி மேகனை ஊடகத்தினர் பின்தொடர்வது குறித்து இளவரசர் ஹாரி வருத்தமும் தெரிவித்திருந்தார்.



இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட பத்திரிக்கை நிறுவனம் மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தவறு என்று சுட்டிக்காட்டியதோடு, மேகனுக்கு ‘மெயில்’ பத்திரிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க

Sep27

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட

Mar04

ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்

Feb25

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட

Feb11

பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள

Oct01

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு

Sep21

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக

Feb02

தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க

Oct10

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா

Mar14

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய

Jun08

கனடாவில் முஸ்லிம் குட

Apr19

அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்

Mar07

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர

Mar21

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச

Sep26

தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா