More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டிடிவி தினகரனை எதிர்த்து போட்டி” புகழேந்தி அதிரடி!
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டி” புகழேந்தி அதிரடி!
Mar 03
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டி” புகழேந்தி அதிரடி!

டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியிலும், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியிலும் ஏதாவது ஒன்றில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மூன்று முறை ஓசூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி உள்ளேன். கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ,ஹிந்தி, தமிழ் என பல மொழிகள் பேசுகிற மக்கள் அதிகமாக உள்ள இடங்கள் ஓசூர் மற்றும் அண்ணா நகர் .



அண்ணாநகரில் வியாபாரரீதியாக பல வருடங்கள் வசித்து வந்தேன். அண்ணாநகரில் தேர்தல் பணியாற்றியுள்ளேன். அதனால் அந்த இரு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். டிடிவி தினகரன் எங்கு நின்றாலும் அவரை தலைமை அனுமதியோடு எதிர்த்துப் போட்டியிட தயார். டிடிவி தினகரன் ஆர்கேநகர் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளார். தொகுதி பக்கமே போவதில்லை. ஆகவே ஆயிரகணக்கான வாக்காளர்கள் அவர் எங்கு நின்றாலும் அவரை தோற்கடிக்க என்னோடு களம் காண்பார்கள்” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்

Apr02

துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன

Jun18

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்

Mar31

கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை

Mar08

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே

Jul28