More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார்!
அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார்!
Mar 02
அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்  கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது முறையாக போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி  அடைந்தார். அப்போது டிரம்ப் புதிய கட்சி துவங்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் ஓர்லேண்டோ நகரில்  நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் டிரம்ப் பேசியதாவது: புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் எந்த திட்டமும் இல்லை. குடியரசுக் கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த போகிறேன். 3வது முறையாக,  வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன்.



குடியரசு கட்சி நிலைத்திருக்கும், வெற்றி பெறும். அனைவரும் இணைந்து அமெரிக்காவின் சுதந்திர ஒளியை பரவ செய்வோம். பைடனின் கொள்கைகள்  நாட்டை சோசலிசத்தை நோக்கி கொண்டு செல்கிறது. அதனை குடியரசு கட்சி ஒருநாளும் ஏற்றுக் கொள்ளாது. பைடனின் ஆட்சி, வேலை வாய்ப்பு,  குடும்பம், எல்லை விவகாரம், எரிசக்தி, பெண்கள், அறிவியல் ஆகிய அனைத்துக்கும் எதிராக உள்ளது. பைடனின் ஆட்சி மோசமாக இருக்கும் என்பது  அறிந்தது. ஆனால், இந்தளவு மோசமாக இருக்கும் என்று கற்பனை கூட செய்யவில்லை. ஒரே மாதத்தில், அமெரிக்கர்களுக்கு முதலில் முன்னுரிமை  என்பது போய், கடைசி என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun24

தொழில் அதிபர் 

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து  திரவங்களால்

Feb06

சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Aug17

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா

Mar14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Apr03

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக

Jul09

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று

Oct21

தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ர

Apr16

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய

Mar21

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச

May18

உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப

Oct20

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற

Apr16

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக,

Jun07

இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்