More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு!
மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு!
Mar 01
மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு!

பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கும் இடையே கட்சிக்கு அப்பாற்பட்டு நெருக்கம் உண்டு.



சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிந்து, நடந்த பிரிவுபசாரத்தின்போது பிரதமர் மோடி அவரை மனம் திறந்து பாராட்டினார். பல நேரங்களில் நெகிழ்ந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில், குலாம் நபி ஆசாத் இடத்தில் மற்றொருவர் பொருந்துவது கடினம் என்றும் குறிப்பிட்டார்.



அதே நேரத்தில் குலாம் நபி ஆசாத் தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ளார்.



அவருடன் அதிருப்தி கோஷ்டியில் உள்ள பிற தலைவர்கள் நேற்று முன்தினம் கூடிப்பேசினார்கள். அந்த கூட்டத்தில்கூட கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும், கட்சி அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்தன.



இந்த தருணத்தில் ஜம்முவில் குஜ்ஜார் தேஷ் அறக்கட்டளை நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் நேற்று கலந்து கொண்டு பேசினார்.



அப்போது அவர் பிரதமர் மோடியை மனம் திறந்து பாராட்டினார். அவர் கூறியதாவது:-



நான் கிராமத்தில் இருந்து வந்தவன்தான். நான் ஒரு கிராமவாசி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.



நமது பிரதமர் மோடி போன்ற தலைவர்களைப் பற்றிய நிறைய விஷயங்களை நான் பாராட்டுகிறேன்.



எனக்கும் மோடிக்கும் இடையே அரசியலில் மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி வெளிப்படையாக, அதுவும் தான் டீ விற்று வந்ததைக்கூட சொல்கிறார். இது பாராட்டுக்குரியது.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ

Oct31

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான

Aug28

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த

Jul17

தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை

Jun25

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு

Aug10

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா

Aug19

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி

Jul11

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழா

Oct25

ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய

Mar12

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங

Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி

Aug12

புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள

Feb01

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ

Sep16

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை