More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சி!
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சி!
Feb 28
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சி!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.



அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளதோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது. வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.



அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சுவிஸ்மெடிக்' என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-



தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.‌



தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.‌ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல

Mar02

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச

Sep09

ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப

Feb12

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி

Oct31

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச

Mar31

31.3.2022

12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு

Mar12

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலின

Aug19