More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் ‘எம்.எல்.ஏ சீட்டுகளை விற்பதாக புகார்!
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் ‘எம்.எல்.ஏ சீட்டுகளை விற்பதாக புகார்!
Feb 18
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் ‘எம்.எல்.ஏ சீட்டுகளை விற்பதாக புகார்!

கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை கோட்டைவிட்டது ஊரறிந்த உண்மை. அதனால், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய அவர், அவ்வளவு எளிதாக ஆளுங்கட்சியினர் நம்மை ஆட்சியைப் பிடிக்க விடமாட்டார்கள் என கூறியிருந்தார். இது சொந்த கட்சியினருக்கே பொருந்துவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.



சேலம் மாவட்டத்தின் ஏற்காடு தொகுதியின் எம்.எல்.ஏவாக அதிமுகவை சேர்ந்த சித்ரா இருக்கிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவுகிறது. திமுகவின் மூத்த உறுப்பினர்கள் பலர் இந்த தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கும் நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் மாதேஸ்வரன் என்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு தான் அந்த எம்.எல்.ஏ சீட் என கூறியிருக்கிறார்.



திமுகவினர் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்களாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மாதேஸ்வரன் அண்மையில் தான் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியிருக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க சிவலிங்கம் முனைப்பு காட்டுவது, திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேசிய உறுப்பினர்கள் சிலர், சிவலிங்கம் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கட்சிப் பதவியை மற்ற கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக் கொண்டு கூறு போட்டு விற்பதில் அவர் கில்லாடி. திமுக தலைமையே தனது கைக்குள் இருப்பதாக எல்லாரிடமும் திமிராக பேசுகிறார்.



அதிமுகவில் கட்சித் தாவிய மாதேஸ்வரன் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எம்.எல்.ஏ சீட்டை கூறுபோட்டு விற்கும் சிவலிங்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பித் தள்ளியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Jun13

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம

Jul26

பிக்பாஸ் பிரபலம் 

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Jan28

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி

Mar20

நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்

May01

கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய

Feb13

தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக

Jan18

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்

Mar23

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா

Mar09

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல

Jul17

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச

Jun24

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட

Jun26

கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ