இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களின் சதவீதம் சிறிதளவு அதிகரித்துள்ளது!
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களின் சதவீதம் சிறிதளவு அதிகரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, கடந்த வாரம் 0.52 ஆக பதிவாகியிருந்த கொவிட் மரணங்களின் சதவீதம், நேற்றைய நாளில் 0.54 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் பதிவான 13 மரணங்களில், 12 பேர் ஆண்கள் என்பதுடன், பெண் ஒருவரின் மரணமும் பதிவாகியுள்ளது. ஆறு பேரின் மரணங்கள் தங்களது வீடுகளில் பதிவாகியுள்ளன.
களுத்துறையில் மூவர், நுவரெலியா, அக்கரப்பத்தனை, பேலியகொடை, போம்புவல, நாபொட, மக்கொண, கம்பளை, பாணந்துறை, வேவுட, நுகேகொடை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்று மற்றும் சிறுநீரக நோய் நிலைமை, தீவிர மூச்சிழுப்பு நோய் மற்றும் நீரிழிவு நோய், நிமோனியா, இதய நோய், உயர் குருதி அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், குருதி நஞ்சானமை என்பன இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.