மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்டு உதவியாளராக வேலை செய்யும் ஒரு பெண்ணின் 16 வயதான மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார் .இந்நிலையில் அந்த டீனேஜ் பெண் அங்குள்ள ஒரு
வீட்டில் வேலை பார்க்கும் தன்னுடைய தாயை பார்க்க அடிக்கடி செல்வார். அப்போது அந்த வீட்டில் தச்சராக இருக்கும் செவானியா பகுதியில் வசிக்கும் ஆயுஷ் பாக் என்ற 35 வயதான நபர் அந்த பெண்ணை நோட்டமிட்டுள்ளார் .மேலும் அவர் அங்கு வரும்போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து வந்து அவரிடம் வம்பு செய்வாராம் ..
கடந்த புதன் கிழமையன்று அந்த டீனேஜ் பெண் தன்னுடைய தாயின் சம்பள பணத்தை வாங்க அந்த வீட்டிற்கு வந்துள்ளார் .அப்போது அந்த வீட்டில் யாருமில்லாததால் அந்த ஆயுஷ் பாக் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .
அதன் பிறகு அவரிடமிருந்து தப்பி, தனது வீட்டிற்குள் வந்த அந்த டீனேஜ் பெண் யாரிடமும் பேசாமல் அதிர்ச்சியிலிருந்தார் .அதை பார்த்து சந்தேகப்பட்ட அந்த பெண்ணின் தாய், அவரிடம் இது பற்றி விசாரித்த போது, அவர் ஆயுஷ் பாக்கால் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியான அந்த தாய், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த ஆயுஷ் பாக்-மீது புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து பலாத்காரம் செய்த ஆயுஷ் பாக்கை கைது செய்தார்கள் .