More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இடை நிறுத்தப்பட்டிருந்த காவல்த்துறையினரின் சோதனை ஆரம்பம் நூற்றுக்கணக்கானோர் கைது!
இடை நிறுத்தப்பட்டிருந்த காவல்த்துறையினரின் சோதனை ஆரம்பம்  நூற்றுக்கணக்கானோர் கைது!
Feb 25
இடை நிறுத்தப்பட்டிருந்த காவல்த்துறையினரின் சோதனை ஆரம்பம் நூற்றுக்கணக்கானோர் கைது!

அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்துறையினரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.



இந்நிலையில், நேற்றும் இன்றும் காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் காவல்த்துறையினரினால் வழங்கப்பட்டன.



இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்த்துறை அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கல்முனை ,சம்மாந்துறை, சவளைக்கடை , காவல் நிலைய போக்குவரத்து காவல்த்துறையினரும் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.



இச்சோதனை நடவடிக்கையின் போது 117 பேருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec20

முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ

Feb23

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக

Oct07

தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப

Mar28

ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான

Feb23

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ

Feb11

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை

Sep17

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Feb04

அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா

Jan30

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி

Aug17

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல

Sep19

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர

Jun16

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க

Jun06

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக

May26

நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்

Sep24

‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு  தமிழ் அமைப