More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார்!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார்!
Feb 25
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இலங்கைக்கு சென்றார். அவர் பிரதமரான பிறகு இலங்கைக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.



நேற்று முன்தினம், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார்.



இருதரப்பு உறவை வலுப்படுத்துவதும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் மூலம் வர்த்தகத்தை பெருக்குவதும்தான் தனது பயணத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.



இந்தநிலையில், நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.



இருவர் மட்டுமே இடம்பெற்ற அந்த சந்திப்பில், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.



பொதுநலன் சார்ந்த வர்த்தகம், சுற்றுலா, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறித்தும் பேசினர். இவை இருதரப்புக்கும் பலன் அளிக்கும் விஷயங்கள் ஆகும்.



விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதுடன், மக்களுக்கு குறைவான விலையில் விளைபொருட்களை அளிக்க அவர்கள் உறுதி பூண்டனர். இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், பாகிஸ்தான் மக்களை இலங்கைக்கு வருமாறு கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விவாதித்தனர்.இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்ததாக கோத்தபய ராஜபக்சேவும், இம்ரான்கானும் தனித்தனியாக டுவிட்டரில் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட

Sep09

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை

May05

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Mar12

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ

Oct13

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய

Mar28

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்

Jan17

இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க

Sep23

தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ

Mar28

பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய

Sep09

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி

Apr30

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்ல

Mar30

உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொ

May19

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்

Feb25

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச