More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை!
Feb 11
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை நடத்துகிறது.



தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிய நிலையில், தமிழக தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குச் சாவடி, வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.



இது தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு, நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த குழு முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தலை எத்தனை கட்டமாக நடத்துவது? தேர்தல் தேதியை எப்போது அறிவிப்பது? தபால் வாக்கு முறை அமல்படுத்துவதா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது, தமிழ் புத்தாண்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரோ அல்லது பிறகோ தேர்தல் நடத்த வேண்டாம் என பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



 சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2ம் நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கடலோர காவல் படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பங்கேற்றுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Feb23

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 42 வார்டுகளை திமுக வ

Aug11

நாடாளுமன்ற மழைக்காலக் 

கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை

Mar07

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய

Jan03

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி

Jun06

முஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை

முஹம்மது நபியைப் ப

Apr05

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண

Sep03

பாராலிம்பிக் உயரம் தாண்டுத

Sep08

மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ

Jul14

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Mar06

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய

May01

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-

May07

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப