More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது!
Feb 11
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது. உலகில் ஐந்தாவது நாடாக செவ்வாயில் தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விண்வெளியில் பயணித்த ஹோப்,  நேற்றிரவு 7.30 மணிக்கு செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.



494 மில்லியன் கிமீ தூரம் பயணித்துள்ள ஹோப் மணிக்கு 39 ஆயிரத்து 600 கிமீ வேகத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஹோப் செவ்வாயை நெருங்கியதும் அதன் வேகம் 18 ஆயிரம் கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.



ஹோப் விண்கல திட்டம் 2014ஆம் ஆண்டு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நயானாலும், துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமாலும் அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு இதன் தயாரிப்புப் பணிகளைத் துணை அதிபர் தொடங்கிவைத்தார். ஜப்பான் நாட்டிலுள்ள தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து 2020ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி விண்ணில் MHI H2A என்ற ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.



செவ்வாயை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே விண்வெளி கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது சயீத். வெற்றிக்கரமாக சுற்றுவட்டப்பாதையை நெருங்கியவுடன் அவர், “நீங்கள்(ஆராய்ச்சியாளர்கள்) சாதித்துவிட்டீர்கள். இது உங்களுக்கும் தேசத்துக்கும் கிடைத்த மரியாதை. வாழ்த்துகள்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். இதைக் கேட்ட விஞ்ஞானிகள் கண்களில் கண்ணீர் ததும்ப ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ஆரவாரம் செய்தனர். இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமீரகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.



மூன்று ஆராய்ச்சிக் கருவிகளோடு செவ்வாய்க்குச் சென்றிருக்கும் ஹோப், செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் முழுமையானை புகைப்படத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவகாலம் மற்றும் தினசரி ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ளும் வகையில் வளிமண்டலத்தின் வெவ்வேறு பகுகிககளில் வெவ்வேறு தரவுகளைச் சேகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.



இந்தத் தரவுகள் செவ்வாய் வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் நிலவும் காலநிலை இயக்கவியல், வானிலை ஆகியவை குறித்த புரிதலை உலகிற்கு உணர்த்தும் என்கின்றனர். அதேபோல வளிமண்டலத்தில் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் எவ்வாறு நகர்கின்றன, எவ்வாறு செவ்வாயிலிருந்து வெளியேறுகின்றன உள்ளிட்டைவை குறித்தும் ஹோப் கண்டுப்பிடிக்கும் என ஹோப்புடன் இருக்கிறார்கள் அமீரக விஞ்ஞானிகள்!






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு

Feb28

உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத

May12

இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்

Feb07

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Apr30

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jun08

அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப

Mar11

உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப

Aug13

ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத

Mar20

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ

Feb03

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்ற

Sep12