More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது!
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது!
Feb 11
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது!

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



அதன்படி கொழும்பு 5 பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



கொவிட்19 நிமோனியா நிலை, இதய நோய் தொற்று என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது வத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று கண்டறியப்பட்டது.



பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.



அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அளுத்கம பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.



இதனையடுத்து, அவர் தேசிய தொற்று நோயியல் நிருவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



கொவிட்-19 நிமோனியா நிலை, குருதி விசமானமை மற்றும் சிறுநீரகம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கம்பஹா பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் திவுலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பட்டுள்ளது.



வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.



இதனையடுத்து அவர் இரனைவில சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.



கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான

May10

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா

Apr11

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப

Sep26

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்

May11

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர

Jun15

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப

Feb18

பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம

Jan25

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி

Jan15

 வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள

Sep19

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி

Feb11

இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி

Oct17

அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான  கிறிஸ்

May03

பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு

Jun08

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ

Sep29

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க