மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டோபியிலிருந்து துர்க்காபூர் வரை 348 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் கட்டிய இயற்கை எரிவாயு குழாய் உள்ளிட்ட 4 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மேற்கு வங்கத்தை மையமாக மாற்ற முயற்சி எடுத்துள்ளது. இதில் ஹால்டியா நகரம் முக்கியப் பங்கு வகிக்கும்.
ரயில், சாலை விமான நிலையம் மற்றும் துறைமுக இணைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஹைட்ரஜனை சுத்தமான எரிபொருளாக பெறுவதற்காக பணியை ஆரம்பித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.