More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா!
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா!
Feb 08
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்திவைத்துள்ளது.



தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும்வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 என்ற உருமாறிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஸ்வெலி ம்கைஸின் தெரிவித்துள்ளார்.



இந்தியாவின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசியை தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.



இந்நிலையில், இதற்குப் பதிலாக, ஜோன்சன் & ஜோன்சன் (ஜே & ஜே) மற்றும் ஃபைசர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அடுத்துவரும் வாரங்களில் வழங்கப்படவுள்ளன.



அதேநேரத்தில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என தென்னாபிரிக்க நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr28

இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை வ

Oct18

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா

Mar27

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Feb06

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக

May09

ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்

Jun03