More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
Feb 08
இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன என வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.



நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.



தேசிய உற்பத்திகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போதைய விலை குறைப்புக்கான பிரதான காரணியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட கண்காணிப்பு நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



அதன்படி விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம்..




  • வெள்ளை அரிசி ஒரு கிலோ – 93 ரூபாய்

  • வெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ – 96 ரூபாய்

  • சம்பா ஒரு கிலோ – 99 ரூபாய்

  • கீரி சம்பா ஒரு கிலோகிராம் – 125 ரூபாய்

  • கோதுமை மா ஒரு கிலோகிராம் -84 ரூபாய்

  • வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் -99 ரூபாய்

  • சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் -125 ரூபாய்

  • தேயிலை தூள் 100கிராம் பெக்கட்- 95 ரூபாய்

  • சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் -165 ரூபாய்

  • பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் -120 ரூபாய்

  • உருளைக்கிழங்கு (தேசிய உற்பத்தி) ஒரு கிலோகிராம்- 180 ரூபாய்

  • உருளைக்கிழங்கு (பாக்கிஸ்தான்) ஒரு கிலோகிராம் -140 ரூபாய்

  • கடலை ஒரு கிலோகிராம் -175 ரூபாய்

  • உலர் மிளகாய் ஒரு கிலோகிராம் -495 ரூபாய்

  • டின் மீன் 425 கிராம் -220 ரூபாய்

  • டின்மீன்(இறக்குமதி)-265 ரூபாய்

  • நெத்திலி 1கிலோகிராம் -575 ரூபாய்

  • கோழியிறைச்சி ஒரு கிலோகிராம் -400 ரூபாய்

  • உப்பு ஒரு கிலோகிராம் -43 ரூபாய்

  • பால்மா 400 கிராம் -355 ரூபாய்

  • சோயா எண்ணெய் 500 மி.லீ. – 310 ரூபாய்

  • ஆடை கழுவும் சவர்காரம் 115 கிராம் – 43 ரூபாய்

  • பார் சவர்காரம் 650 கிராம் – 260 ரூபாய்

  • வாசனை சவர்காரம் 100 கிராம் – 56 ரூபாய்

  • பற்பசை – 250 ரூபாய்

  • முகக்கவசம் – 14 ரூபாய்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக

Oct23

பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி

Jan28

அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக

Feb20

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில்  இடம்பெற

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்

Jan31

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத

Sep16

புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்

Jun11

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு

Mar02

ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச

Oct10

அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்

Feb09

சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர

Mar07

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்

Mar21

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ

May20

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் இன்றையதினம் 20.05.2022

Apr25

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச