தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
மேலும் இப்படம் தற்போது வரையில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.அந்த காட்சியில் தளபதி விஜய் பெண்களின் ஆடை குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அந்த காட்சியில் நடிகை கௌரி ஷங்கர் முக்கிய காட்சியில் சிரித்து கொண்டு இருக்கிறார், இதை கவனித்த நெட்டிசன்கள் தற்போது அதை கலாய்த்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்.