More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக்கூடும்- ஆய்வில் தகவல்
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக்கூடும்- ஆய்வில் தகவல்
Feb 07
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக்கூடும்- ஆய்வில் தகவல்

 



கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவுவது சில நாடுகளில் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.



மரபணுவில் மாற்றம் அடைந்த இந்த வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல் உருமாறிய கொரோனாவால் அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.



 



இதனால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. உருமாறிய கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



 



உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் பலன் அளிக்காமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



 



இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே அந்நோயின் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களை எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



 



தென் ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம்.



 



தடுப்பு மருந்துகளை செலுத்தி ஆய்வு செய்த போது உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்த தரவு உண்மையாக இருந்தால், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் நாம் நெருக்கமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து பொது மக்கள் பின்வாங்க நேரிடும் என்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul24

அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறைய

Feb22

உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்

Mar17

 மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்

Feb13

உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்

May20

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jun01

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச

Mar14

உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம

Mar07

பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்

Sep28

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியா

Sep09