More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை
சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை
Feb 07
சென்னையில் 2-வது டெஸ்ட்: ஆன்லைனில் 9-ந்தேதி டிக்கெட் விற்பனை

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.



அதன்படி முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.



இதற்கிடையே சென்னையில் வருகிற 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.



அதன்படி 2-வது டெஸ்ட் போட்டிக்கான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக டிக்கெட் விற்பனை வருகிற 9-ந்தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-



இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வருகிற 9-ந்தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



2-வது டெஸ்டுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் ஐ.ஜே. மற்றும் கே ஆகிய 3 ஸ்டாண்டுகளின் இருக்கைகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.



9 ஆண்டுக்கு பிறகு அந்த 3 ஸ்டாண்டுகளிலும் ரசிகர்கள் அமர வைக்கப்படுகிறார்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது அந்த 3 ஸ்டாண்டிலும் ரசிகர்கள் இருந்தனர். பின்னர் விதிமுறை மீறல் காரணமாக அந்த 3 ஸ்டாண்டுகள் ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் 3 கேலரிகளும் திறக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம

Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Sep22

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர

Oct01

ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன

Mar15

இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப

Jan25

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ

Oct16

ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி

Jan10

ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Jan19

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ

Aug01

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா

Jul07

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி

Feb04

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்

Feb14

தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி