இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாரிய அளவிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைக்கு அமைய இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரதேச சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் செயற்படுமாறு பெல்மடுல்ல பிரதேச மக்களிடம் கேட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.