More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள்-செல்வராசா கஜேந்திரன்!
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள்-செல்வராசா கஜேந்திரன்!
Feb 14
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள்-செல்வராசா கஜேந்திரன்!

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள்-செல்வராசா கஜேந்திரன்!



தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் காணப்படுகின்றதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



சரத் வீரசேகரவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பி.பி.சி செய்தி பிரிவுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சர் சரத் வீரசேகர, மோசமான இனவெறி சிந்தனைக்குள் புதைந்துள்ளார்.



ஆகவேதான் இவ்வாறான கருத்துகளை அவர் வெளியிட்டு வருகின்றார். இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமிழர்கள் மீதுஇலங்கையின் முப்படைகளே தாக்குதல்களை நடத்தியது.



ஆகவேதான் இலங்கை அரச படைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. அதனை சரத் வீரசேகரவும் எதிர்கொள்ள வேண்டும்.



 தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்குவதற்காகவுமே சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார்.



இது ஜனநாயக விரோத செயற்பாடாகும். அவ்வாறான சட்டமூலம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நாம் செயற்படுவோம்.



இவ்வாறான செயற்பாடொன்றை இலங்கை அரசாங்கம் செய்யும் பட்சத்தில், சர்வதேசத்திற்கு முன்பாக தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep06

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம

Apr03

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள

Mar25

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்

Feb04

குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம

Sep22

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட

Apr28

முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும

Oct03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட

Jun18

இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு

Feb06

தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ

May03

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம

Feb02

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா

Jan02

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Mar08

ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி