More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
Feb 14
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!



வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.



அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர், கிளிநொச்சியிலுள்ள மற்றொரு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில், நேற்று (சனிக்கிழமை)  340 பேரின் மாதிரிகள், பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரைச்சியிலுள்ள மற்றொரு ஆடைத்தொழிற்சாலையில் கடந்த வாரம் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.



மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.



முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் நெஞ்சுவலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என  அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec17

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற

May03

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப

Mar11

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந

Sep09

இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று

May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ

Jun03

பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்

Mar06

இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய

Mar31

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள

Jun09

ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு  ராணுவத்தினரால் வ

May25

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப

Mar11

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம

Feb09

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின

Sep27

பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண