காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அதேபோல் தான் தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவின் இடத்தை யாராலும் எட்ட முடியாது.
அந்த அளவிற்கு காமெடி விளையாடியுள்ளார், காமெடிக்கு காமெடியும், கருத்தும் இருக்கும். ஏன் மீம்ஸ் ஏதாவது ஒரு விஷயத்திற்கு எடுக்க வேண்டும் என்றால் அவரது காமெடி காட்சிகள் தான் முதலில் வரும்.
ஆனால் என்னவோ அவரை இப்போதெல்லாம் அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லை. இந்த நேரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.அவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் மனோபாலா டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.