More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகள் உள்நுழைய தடை உத்தரவு
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகள் உள்நுழைய தடை உத்தரவு
Feb 05
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகள் உள்நுழைய தடை உத்தரவு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.



பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.



பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.



பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.



இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராயந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் காயத்திரி சைலவன், பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்கி கட்டளை வழங்கினார்.



பேரணியில் பங்கேற்போர் பல மாவட்டங்கள் ஊடாக அங்குள்ளவர்களையும் இணைத்து வருவதனால் கொவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த தடை உத்தரவு வழங்கப்படுகிறது என்று நீதவான் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.



தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வட.கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்த கோரியும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



குறித்த போராட்டம் மூன்றாம் நாளான இன்று காலை, திருகோணமலையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan11

திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற

Mar14

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட

Mar30

வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ

Sep06

 இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச

May03

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக

Sep23

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களி

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

Mar14

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்

Jan25

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக

Apr03

நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந

Sep22

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு

Mar06

காரைதீவுக் கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ

Apr02

இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி

May03

நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க