பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது, குறித்த இருவரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆசத்ய பட்டபெந்தி உத் தரவிட்டுள்ளார்.