More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்: GMOA கோரிக்கை
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்: GMOA கோரிக்கை
Feb 05
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்: GMOA கோரிக்கை

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி திறம்பட வழங்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) சுட்டிக்காட்டுகிறது.



கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அச்சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் ஹரித அளுத்கே, கொவிட்-19 இறப்புகளில் 70 வீதமானவை தொற்றுக்குள்ளான 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களிடமிருந்தே பதிவாகிறது என்றார்.



தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட 10 வீதமானோரே கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். எனவே 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.



குறித்த வயதில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் இறப்புகளின் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரிக்கக்கூடும் என்றும் மருத்துவர் அளுத்கே கூறினார்.



இந்த வேளையில் திருமணங்கள் மற்றும் விருந்துபசாரங்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வதால் இந்நோய் வேகமாகப் பரவுகிறது என்றார்.



கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் நிலையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுடன் சிகிச்சை நிலையங்களில் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.



கொவிட்-19 காரணமாக அண்மையில் உயிரிழந்த ராகம வைத்தியசாலை மருத்துவர் கயான் தந்தநாராயண, தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை வசதிகள் இல்லாததால் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது என்று  மருத்துவர் அளுத்கே மேலும் கூறினார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப

Feb04

தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்

Oct07

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய

Sep16

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள

Jul29

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி

May19

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ

Jul01

 

நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு

Oct14

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப

Feb05

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு

Sep25

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Jan29

 கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ

Mar07

பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர

Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Sep24

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந

Jan12

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்